என் திரைப்பயணத்தில் கலவையான விமர்சனங்கள் பெற்ற பல படங்கள் இருக்கிறது. அதில் ஒன்று சீமராஜா.

0
71

சிவகார்த்திகேயனின் பழைய பேட்டி வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அது என்னவென்றால், சீமராஜா படம் குறித்த பேட்டி. இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் குறித்த சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்து இருந்த படம் “சீமராஜா” . இதில் சமந்தா, சூரி, சிம்ரன், நெப்போலியன் என பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை சந்தித்து இருந்தது. இந்த நிலையில் இது தொடர்பாக சிவகார்த்திகேயன் பேட்டியில் கூறி இருந்தது,

என் திரைப்பயணத்தில் கலவையான விமர்சனங்கள் பெற்ற பல படங்கள் இருக்கிறது. அதில் ஒன்று சீமராஜா. இந்த படம் பல பேருக்கு பிடிக்கவில்லை என்றும் சொன்னார்கள். மொத்தமாகவே பேருக்கு 25 கோடி வசூல் செய்திருந்தது . ஆனால், விருது விழா ஒன்றில் என் மகளுக்கு நான் நடித்ததிலேயே பிடித்த படம் எது என்று கேட்டதற்கு சீமராஜா என்று கூறி இருந்தார். இந்த படம் நிறைய பேருக்கு பிடிக்கவில்லை என்று சொல்கிறார்கள். பாப்பா உனக்கு பிடித்திருக்கிறதா! அதுவே எனக்கு போதும் என்று கூறினார். இப்படி சீமராஜா படம் குறித்து சிவகார்த்திகேயன் கூறி இருந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here