எனக்கே இவனைப் புரிந்து கொள்ள பல வருடங்கள் ஆகிவிட்டது. பார்கவ்வின் அம்மா.

0
94

 

இந்த படத்தில் நயன்தாராவின் தம்பியாக பார்கவ் என்ற ஸ்பெஷல் குழந்தை ஒருவர் நடித்திருந்தார். இவருடைய நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றது. இந்நிலையில் சமீபத்தில் பார்கவ் தன் அம்மாவுடன் சேர்ந்து பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர்கள் படத்தின் அனுபவம் குறித்து பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, இந்த படத்தில் என்னுடைய மகன் நடித்தது எனக்கு ரொம்ப சந்தோஷமாகவும், பெருமையாகவும் இருக்கிறது. படம் பார்க்கும்போது ரொம்ப எக்சைட்மென்ட் ஆக இருந்தேன். இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு வாட்ஸ்அப் மூலமாக தான் வந்தது.

அதாவது வாட்ஸ் அப்பில் இந்த படத்தில் நடிப்பதற்காக ஸ்பெஷல் குழந்தை வேண்டும் என்றும் ஒன்பதிலிருந்து பத்து வயது இருக்கிற ஆண் குழந்தை வேண்டும் என்றும் தகவல் வந்திருந்தது. ஆரம்பத்தில் நடிக்க வைக்கலாமா? வேண்டாமா? என்று குழப்பத்தில் இருந்தேன். ஏனென்றால், இவனை புரிந்து கொள்வது எளிது அல்ல. எனக்கே இவனைப் புரிந்து கொள்ள பல வருடங்கள் ஆகிவிட்டது. அதனால் ஆரம்பத்தில் தயங்கினேன். பின் முயற்சியோடு ஆடிசனுக்கு சென்று இருந்தேன். அப்போது இவனைப் பார்த்த நயந்தாரா நடிக்கலாம் என்று சொல்லிவிட்டார்.

அதுமட்டுமில்லாமல் இவனை நான் எந்த அளவுக்கு முழு கவனத்தோடு பார்த்துக் கொள்வேனோ, அதே அளவுக்கு மேடமும் இவனை நன்றாக பார்த்துக் கொண்டார். சூட்டிங்கில் இவனுடைய மைண்ட் செட் பொறுத்து தான் ஷூட்டிங்கும் நடத்துவார்கள். ஒருசில சீன்களில் மட்டும் தான் இவன் தனியாக இருப்பான். மீதி எல்லாமே நயன் மேடம் உடன் தான் இருப்பான். இவனும் நயனும் சேர்ந்து நிறைய போட்டோக்கள் எடுத்து இருக்கிறார்கள். அந்த அளவிற்கு நயன் மேடம் இவன் உடன் குளோஸ் ஆகிவிட்டார். பார்கவ் வெளியாட்கள் யாரிடமும் இவ்வளவு நெருக்கமாக பழகியதே இல்லை. ஆனால், விஜய் சேதுபதி,நயன், விக்கி உடன் அதிகமாக க்ளோஸ் ஆகி விட்டான் என்று பல விஷயங்களை கூறி இருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here