சிலர் எதற்கெடுத்தாலும் மற்றவருடன் தங்களை ஒப்பிட்டு பார்க்கும் பழக்கம் கொண்டுள்ளனர், அவ்வாறு மற்றவரோடு ஒப்பிடுவது தவறான செயலாகும். ஒப்பிடும் பழக்கம் விரைவில் உங்கள் வாழ்க்கையில் ஒரு நோயாக மாறிவிடும், அதனால் வாழ்க்கையில் எந்தவொரு மகிழ்ச்சியையும் உங்களால் அனுபவிக்க முடியாமல் போகலாம். மக்கள் சில சூழ்நிலைகளில் தங்களை மற்றவர்களுடன் ஒப்பிடுகிறார்கள், அது பெரும்பாலும் எதிர்மறையான எண்ணங்களையும், மன அழுத்தத்தையுமே விளைவிக்கிறது.

அதற்கு அந்த அன்னம் எதிர்மறையாக பதிலளித்து, ஒரு கிளியை நோக்கிக் காட்டுகிறது. “சந்தோஷமும் நானும்? நீ இந்த கிளியைப் பார்த்ததில்லையா? இந்த கிளி ஒன்றல்ல, அழகான இரண்டு வண்ணங்களை கொண்டுள்ளது. அதனை கேட்ட அந்த கிளி, உடனே அந்த பறவைகளிடம் மயிலை நோக்கிச் காட்டுகிறது. அது அழகாக இருந்தும் தற்போது கூண்டில் அடைக்கப்பட்டு வியாபாரத்திற்காக விற்கப்பட வைத்திருப்பதை குறித்து கூறுகிறது. உடனே அந்த மயில், யாருடைய பேச்சையும் கேட்காத, எந்த இடத்திற்கு வேண்டுமானாலும் பறந்து செல்லக்கூடிய காகமாக இருக்க தான் எனக்கு ஆசை என்று கூறியது. இவ்வாறு இந்த வீடியோ நிறைவு பெறுகிறது, இதன்மூலம் கூறப்படும் கருத்து என்னவென்றால் தூரத்திலிருந்து பார்க்கும்போது ஒன்றைவிட விட ஒன்று மேன்மையானதாக தான் தெரியும், ஆனால் அதன் உள்ளே சென்று பார்த்தால் தான் அதன் உண்மை நிலை முழுமையாக தெரியும். அதனால் உங்களை ஒருபோதும் மற்றவர்களுடன் எப்போதும் ஒப்பீட்டு பார்க்காதீர்கள் என்ற கருத்தை வலியுறுத்துகிறது.