ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் சூர்யா அறிவியல் சம்மந்தப்பட்ட கதைக்களம் கொண்ட ஒரு படத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இன்று நேற்று நாளை என்கிற அறிவியல் புனைகதை படம் மூலம் வரவேற்பை பெற்ற இந்த இயக்குனர் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து அயலான் படத்தை இயக்கி வருகிறார். அயலான் படமும் அறிவியல் ஆச்சர்யம் நிறைந்த கதையம்சத்துடன் உருவாகி வருகிறது. சூர்யா-ரவிக்குமார் கூட்டணியில் உருவாகப்போகும் படம் குறித்து அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் இன்னும் வெளிவரவில்லை, மேலும் இந்த பெயரிடப்படாத படத்தை ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் என்று கூறப்படுகிறது.
நடிகர் சூர்யா ‘ஏழாம் அறிவு’, ’24’ போன்ற அறிவியல் கதையம்சம் நிறைந்த படத்தில் நடித்திருந்தார், இந்த படம் சிறந்த வரவேற்பை பெற்றது. அதேபோல இப்படமும் உருவானால் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பும், வரவேற்பும் பெருகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது சூர்யா, வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வாடிவாசல்’ மற்றும் பாலா இயக்கும் படத்தின் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். மேலும் ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் சூர்யா நடிப்பதாக கூறப்படும் அறிவியல் கதையம்சம் நிறைந்த இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.