என் அப்பாவின் நிழலில் வாழ விரும்பவில்லை – இந்தியா சார்பில் விளையாடி தங்கம் வென்ற மாதவன் மகன் பேச்சு.

0
44

நடிகர் மாதவன், சரிதாவை 1999 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு வேதாந்த் என்ற மகன் உள்ளார்.தற்போது இவருக்கு 16 வயது ஆகிறது. வேதாந்த் மாதவன் விளையாட்டு துறையில் அதிக ஆர்வம் உள்ளவர். இதனால் இவர் நீச்சல் போட்டிகளில் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறார். மேலும், இவர் பல நீச்சல் போட்டிகளில் இந்தியா சார்பில் கலந்து கொண்டு பதக்கங்களையும் வென்றுள்ளார்.

அந்தவகையில் கடந்த செப்டம்பர் மாதம் பெங்களூரில் நடைபெற்ற தேசிய அளவிலான நீச்சல் போட்டியில் வேதாந்த் பங்குபெற்று இருந்தார். இதில் இவர் 7 பதக்கங்களை வென்று அசத்தி இருக்கிறார்.இதற்கு பலரும் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். இந்த நிலையில் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் வேதாந்த் கலந்துகொள்ள இருக்கிறார். இதற்காக பயிற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார்.

நீச்சல் வீரன் வேதாந்த்:

இந்த நிலையில் தன்னுடைய மகனின் நீச்சல் பயிற்சிக்காக நடிகர் மாதவன் தன் மனைவியுடன் துபாய்க்கு குடி பெயர்ந்து உள்ளார். இதுகுறித்து இவர் பேட்டியும் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பது, கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக மும்பையில் உள்ள பெரிய நீச்சல் குளங்கள் எல்லாம் மூடப்பட்டு உள்ளது. நானும் என்னுடைய மனைவியும் எங்களுடைய மகன் உடன் துபாயில் இருக்கிறோம். இங்கு சிறந்த நீச்சல் குளங்களில் பயிற்சி பெற முடிகிறது. இதனால் ஒலிம்பிக் போட்டிக்காக வேதாந்த் தயாராகி வருகிறார்.

வெள்ளிப்பதக்கம் :

இப்படி ஒரு நிலையில் டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் (copenhagen) நடைபெற்ற டேனிஷ் நீச்சல் போட்டியில் பங்கேற்ற வேதாந்த் மாதவன், 1500 மீட்டர் free பிரிவில் வெள்ளி பதக்கம் வென்றார். டென்மார்க் ஓபன் நீச்சல் போட்டியின் 200 மீட்டர் Fly பிரிவில் இந்தியாவின் முன்னணி நீச்சல் வீரர் சஜன் பிரகாஷ் தங்கம்வென்றுள்ளார். இதற்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.

வெள்ளியை தொடர்ந்து தங்கம் :

இப்படி ஒரு நிலையில் கடந்த ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெற்ற 800 மீட்டர் பிரிவில் தங்க பதக்கம் வென்று இருக்கிறார் வேதாந்த். அதிலும் வெறும் 10 மில்லி நொடிகள் வித்யசத்தில் தங்கத்தை தட்டி சென்றுள்ளார் வேதாந்த், அதே போல நேற்று 200 மீட்டர் ஃப்ரீஸ்டைல் பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய வீரர் சஜன் பிரகாஷ், 100 மீட்டர் ஃப்ரீஸ்டைல் பிரிவில் ஐந்தாவது இடம்பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெற்றி குறித்து வேதாந்த் :

இந்தியா சார்பில் விளையாடி தங்கம் வென்ற வேதாந்த்திற்கு பலரும் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் இந்த வெற்றி குறித்து பேசிய அவர் ‘”நான் என் அப்பாவின் நிழலில் வாழ விரும்பவில்லை. நான் அவரது மகனாக மட்டுமே இருக்க விரும்பவில்லை. எனக்கென ஒரு பெயர் வாங்க விரும்புகிறேன். எனது குடும்பம் எனக்கு தொடர்ச்சியான ஆதரவு வழங்கி வருகிறது. எனக்காக எனது பெற்றோர்கள் துபாய்க்கு குடிபெயர்ந்து வந்துள்ளனர்” என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here