அதாவது மண்ணில் உள்ள காரம் மற்றும் அமிலத்தன்மையின்(ph) மதிப்பு மற்றும் அந்த மண்ணில் காணப்படும் பாக்டீரியா, பூஞ்சை போன்ற நுண்ணுயிர்களின் தன்மை மற்றும் ஈரப்பதம், வெப்பநிலையை பொறுத்து எலும்பு சிதைவடையும் காலம் மாறுபடலாம்.
சாதாரணமாக இறந்த வரின் உடலை 6 அடி பள்ளத்தில் சவப்பெட்டி இல்லாமல் புதைத்தால் அந்த மண்ணின் ஈரத் தன்மையை பொறுத்து 8 முதல் 14 ஆண்டுகளில் எலும்பானது சிதைக்கப்படும்..
இதுவே வெப்பம் அதிகமான மணல் பாங்கான பகுதிகளில் புதைக்கப்படும் உடலின் எலும்பானது சிதைந்து தூள் ஆவதற்கு 100 வருடங்களுக்கு மேல் கூட ஆகலாம். ஏனெனில் வெப்பம் மிகுதியான இடத்தில் பாக்டீரியா போன்ற நுண்ணுயிர்கள் வாழாததே அதற்கு காரணம்.
அதுவே ஒரு தரமான சவப்பெட்டியில் இறந்தவரின் உடலை வைத்து புதைத்தால்…….
உடலானது ஒரே சீராக அழிவுறும். அதாவது உடலில் உள்ள கொழுப்பு அமிலங்கள் நுண்ணுயிரிகளால் சிதைக்கப்பட்டு திரவமாக மாறி வெளியேறி. அந்த உடலை சுற்றி மெழுகு போன்ற ஒன்று உருவாகிவிடும்.
கிட்டத்தட்ட 50 ஆண்டுகளில் எலும்பு தோலுடன் ஒட்டி கருவாடு போன்ற ஒரு அமைப்பு உருவாகி. பின் உடல் தோலும் சிதைவுற்று, எலும்பில் உள்ள கோலஜன் திசுக்கள் நுண்ணுயிரிகளால் அழிக்கப்பட்டு ஏறத்தாழ 80 ஆண்டு முதல் 100 ஆண்டுக்குள் எலும்பானது சிதைவுற்று தூளாகிறது.