எறும்பு கடித்தவுடன் வலி ஏற்படுவதற்கான காரணம் ?

0
49

ஃபார்மிக் அமிலம்( HCOOH ,ph value :3.47)என்பது சில எறும்பு இனங்கள் தெளிக்கும் எரிச்சலூட்டும் இரசாயனமாகும்.

எறும்புகள் தங்களைத் தற்காத்துக் கொள்ளவோ அல்லது மற்ற உயிரினங்களைத் தாக்கவோ இவற்றைப் பயன்படுத்துகின்றனர் சில எறும்பு இனங்கள் கொட்டுவதற்குப் பதிலாக, அவற்றின் அடிவயிற்றின் நுனியில் இருந்து ஃபார்மிக் அமிலம் வெளியிடுகின்றன.

ஃபார்மிக் அமிலம் (formic acid) ஒரு பாக்டீரியா எதிர்ப்பு தன்மை கொண்டு இருப்பதால், பாக்டீரியாவின் வளர்ச்சியைத் தடுக்க பண்ணை ,விலங்குகளின் தீவனத்தில் அடிக்கடி சேர்க்கப்படுகிறது. இது நாம் உண்ணும் உணவுகளின் பிரிசர்வேட்டிவ் ஆக பயன்படுத்தப்படுகிறது.

(ஃபார்மிக் அமிலத்தை உணவுப் பாதுகாப்புப் பொருளாகப் பயன்படுத்துகின்றனர்) உணவு மற்றும் பானங்களுக்கு செயற்கை சுவைகள் மற்றும் வாசனை திரவியங்களுக்கு செயற்கை வாசனைகளை உருவாக்கவும் இந்த ரசாயனம் பயன்படுத்தப்படுகிறது.

மேலும் ஃபார்மிக் அமிலம் என்பது பூச்சிக்கொல்லி, மருந்துகள் மற்றும் ரப்பர் தொழிற்சாலைகளில் பரவலாகப் பயன்படுத்தப்படும் அடிப்படை இரசாயன மூலப்பொருட்களில் ஒன்றாகும்.பார்மிக் அமிலத்தை ஆய்வகத்தில் (lab) தயார் செய்யலாம்.

இது அதிக செறிவுகளில் தீங்கு விளைவிக்கும், ஆனால் குறைந்த செறிவுகளில் (concentration)மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.எறும்பு கடித்த தடிப்பு போக, பேக்கிங் சோடா அல்லது சோப்பு பயன்படுத்தலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here