உங்கள் வியர்வை ஏன் துர்நாற்றத்தை உண்டாக்குகிறது தெரியுமா..?

0
59

குளித்தவுடன் அரைகுறையாக துடைத்துவிட்டு ஆடைகளை அணியாமல் நன்கு ஈரப்பதம் காய்ந்து நீர் வற்றியபின் ஆடைகளை அணியுங்கள்.

வெயில் காலம் வந்துவிட்டாலே பலரும் பயப்படும் விஷயம் வியர்வைதான். சிலருக்கு கட்டுப்படுத்த முடியாதபடி அளவுக்கு அதிகமாக வந்து ஆடைகளையே நனைத்துவிடும். சிலருக்கு அது அதிக துர்நாற்றத்தையும் வீசும். இதனால் அருகில் இருப்பவர்களுக்கும் சங்கடத்தை உண்டாக்கும். அப்படி நம் உடல் வியர்வை துர்நாற்றத்தை உண்டாக்குவது ஏன்..? அதை தடுக்க என்ன வழிகள்

நம் உடலானது எக்ரைன் (eccrine), அபோக்ரைன் (apocrine) என இரண்டு வகையான வியர்வையை சுரக்கிறது. இதில் எக்ரைன் என்பது உடல் முழுவதும் சுரக்கக் கூடியது. இந்த வியர்வையில் அதிக தண்ணீர் மற்றும் குறைந்த உப்பு கலந்து வரும். இது உடல் வெப்பம் மட்டுமல்லாது மன அழுத்தம், கோபம், பதட்டம், உடலுறவு, உற்சாகம் போன்ற உணர்ச்சிகளுக்கும் சுரக்கும் வியர்வை இதுதான்.

அபோக்ரைன் வியர்வை முடி வளர்ச்சி உள்ள இடங்களில் மட்டும் சுரக்கும். அதாவது அக்குள், தலை போன்ற உடலில் முடி வளரக் கூடிய இடங்களில் சுரக்கும். இந்த வியர்வையில் புரதச்சத்து, கார்போ ஹைட்ரேட், அம்மோனியம் போன்றவை இருக்கும். ஆனால் முடி வளரும் இடங்களில் பாக்டீரியாக்கள் இருப்பதால் அவை சத்துகளை அழித்து துர்நாற்றம் வீசும் கெமிக்கல்களாக மாறுகின்றன.
எனவே துர்நாற்றம் வீசுவதை தவிர்க்க முடியாது என்றாலும் அதைக் கட்டுப்படுத்த சில வழிமுறைகளைப் பின்பற்றலாம்.

அதிக அளவிலான சுகாதாரப் பழக்கத்தைப் பின்பற்ற வேண்டும். அதாவது இரண்டு முறை குளிப்பது, நார் தேய்த்து குளிப்பது, வாசனை நிறைந்த பாடி வாஷ் அல்லது சோப்பு பயன்படுத்துதல் போன்றவற்றைக் கடைபிடிக்க வேண்டும்.

வியர்வைக் கிருமிகள் சருமத்தை பாதிக்காமல் பாதுகாக்க ஆண்டிபாக்டீரியல் சோப் பயன்படுத்துவது நல்லது.

குளித்தவுடன் அரைகுறையாக துடைத்துவிட்டு ஆடைகளை அணியாமல் நன்கு ஈரப்பதம் காய்ந்து நீர் வற்றியபின் ஆடைகளை அணியுங்கள்.

ஆடைகளை வியர்வையை உறிஞ்சக்கூடிய பருத்தி ஆடைகள், லூஸாக இருக்கும் ஆடைகளை அணியுங்கள். இறுக்கமான ஆடைகளை தவிறுங்கள்.

வாசனை கமழும் பவுடர், வாசனை எண்ணெய் , வாசனை திரவியங்கள் பயன்படுத்தலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here