அமைச்சர் ரோஜா செல்வமணிக்கு இயக்குநர் பாரதிராஜா தலைமையில் பாராட்டு விழா!

0
67

சமீபத்தில் ரோஜாவுக்கு சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.

நடிகை ரோஜா செல்வமணி தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து தனக்கென ஓரிடத்தைப் பெற்றார்.

தமிழில் இயக்குநர் ஆர்.கே.செல்வமணி அவரை செம்பருத்தி படத்தில் கதாநாயகியாக அறிமுகம் செய்தார்.

பின்னர் அவரையே காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.ரோஜா – செல்வமணி தம்பதிக்கு ஒரு மகளும், மகனும் இருக்கின்றனர்.தமிழில் ரஜினி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள ரோஜா, எண்ணற்ற ரசிகர்களைப் பெற்றுள்ளார்.

அரசியலில் நுழைந்து வெற்றிகரமான அரசியல்வாதியாகவும் ஆனார்.

ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் பணியாற்றி வரும் ரோஜா, நகரி சட்ட மன்ற உறுப்பினராகவும் இருக்கிறார்.

சமீபத்தில் ரோஜாவுக்கு சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.இந்நிலையில் வரும் மே 7-ம் தேதி இயக்குநர் பாரதிராஜா தலைமையில் சென்னை கலைவாணர் அரங்கில் ரோஜாவுக்கு பாராட்டு விழா நடைப்பெறவிருக்கிறது. அதற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here