Reliance Jio பயனர்களுக்கு ஹாப்பி நியூஸ் – சூப்பர் ரீசார்ஜ் திட்டங்கள்!

0
260

நமது நாடான இந்தியா தற்போது டிஜிட்டல் இந்தியாவாக மாறி வருகிறது. அதற்கு முக்கிய காரணம், டெலிகாம் ஆபரேட்டர்கள் தங்கள் வாடிக்கையாளர்களை கவர பல்வேறு வகையான ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்குகிறார்கள். இருப்பினும், டெலிகாம் நிறுவனங்கள் வழங்கும் தினசரி டேட்டா பேக் மிகவும் பிரபலமான ப்ரீபெய்ட் திட்டமாகும். தினசரி டேட்டா பேக்குகளில் அதிக டேட்டா கொண்ட விலை உயர்ந்த திட்டங்கள் முதல் குறைந்த டேட்டா கொண்ட குறைந்த விலை திட்டங்கள் வரை பெரிய பட்டியல் உள்ளது. அதை தொடர்ந்து இந்த திட்டங்கள் பயனர்களுக்கு பல வசதிகளுடன் OTT பயன்பாடுகளுக்கான அணுகலையும் வழங்குகின்றன. Netflix சந்தாவுடன் வரும் இந்தத் திட்டங்களின் விலை ரூ.1000க்கும் குறைவாகவே இருக்கும். Netflix, Disney+ Hotstar, Amazon Prime வீடியோவிற்கான இலவச சந்தாக்களுடன் வரும் திட்டங்களை குறித்த ஒரு தொகுப்பை கீழே பார்ப்போம்.

இந்த நிலையில் தற்போது ரிலையன்ஸ் ஜியோ ஒரு சிறந்த திட்டத்தை ரூ.899 க்கு பயனர்களுக்கு வழங்குகிறது. இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் 336 நாள்களாகும். இதில் மாதம் 2 ஜிபி டேட்டா பயனர்களுக்கு கிடைக்கிறது. இந்த டேட்டாவானது ஒவ்வொரு மாதமும் புதுப்பிக்கப்படும். கூடுதலாக, இந்த திட்டம் நாடு முழுவதும் உள்ள அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் வரம்பற்ற குரல் அழைப்பு, மாதத்திற்கு 50 எஸ்எம்எஸ் போன்ற சேவையை வழங்குகிறது. அதாவது இந்த திட்டத்தில் மொத்தம் 24 ஜிபி டேட்டா முழு காலத்திற்கும் வழங்கப்படுகிறது

மேலும் இந்த திட்டங்களில் இன்னும் பல சலுகைகளையும் வழங்குகிறது. இது ஜியோ டிவி, ஜியோ சினிமா போன்ற ஜியோ பயன்பாடுகளுக்கு இலவச அணுகலை வழங்குகிறது. மேலும் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது பிற மூன்றாம் தரப்பு பயன்பாடுகள் மூலம் நீங்கள் இந்த திட்டத்தினை பெற்று கொள்ளலாம் என்று தெரிவித்து உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here