ராஜபக்சே சிலையை உடைத்த இலங்கை மக்கள்

0
60

கொழும்பு: பாகுபலி படத்தில் வில்லனின் பிரம்மாண்ட தங்க சிலையை மக்கள் ஆவேசத்தோடு உடைத்து எறிந்து வீசுவார்கள். அதுபோல ஆவேசமான காட்சிகள் இலங்கையில் அரங்கேறியுள்ளன. இலங்கை அதிபர் கோத்தபாய, முன்னாள் பிரதமரும் தப்பி ஓடியவருமான மகிந்த ராஜபக்சே ஆகியோரது தந்தை டி.ஏ.ராஜபக்சேவின் முழு உருவ சிலையை சிங்களர்கள் தகர்த்து நடுவீதியில் வீசி எறிந்துள்ளனர்.

குடும்ப அரசியல் எப்படி நாட்டை சீரழித்தது… ஆள்பவர்களுக்கு எதிராக மக்கள் கொதித்து எழுந்தால் என்ன நடக்கும் என்பதற்கு இப்போது இலங்கையில் நடக்கும் காட்சிகளே சாட்சிகளாக உள்ளது.

இந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்தவர்தான் டி.ஏ.ராஜபக்சே, இவர்தான் மகிந்த ராஜபக்சேவின் தந்தை. 1945 ஆம் ஆண்டு அம்பாந்தோட்டையில் பிறந்த மஹிந்த ராஜபக்சே, ஆரம்ப காலம் தொட்டே அரசியலில் ஆர்வத்துடன் பங்கேற்றார், தந்தையின் தேர்தல் பிரச்சாரங்களிலும் தீவிரம் காட்டினார். தந்தையின் மறைவுக்கு பின்னர் மஹிந்த ராஜபக்சே அரசியலுக்கு வந்தார். அவர் 1970இல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார், அரசியலில் இருந்தவாறே 1977இல் சட்டப்படிப்பையும் முடித்தார்.

தீவிர அரசியலில் ஈடுபட்டு வந்த ராஜபக்சே திடீரென 1978இல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியை தழுவினார், அதன்பின்னர் தொடர்ச்சியாக மகிந்த ராஜபக்சேவுக்கு தோல்வி முகம்தான். அந்த காலகட்டத்தில் வழக்கறிஞராக முனைப்புடன் பணியாற்றினார் மகிந்த ராஜபக்சே.

1994இல் அமைச்சராக இருந்த காலகட்டத்தில் இருந்தே தமிழர்கள் மற்றும் விடுதலைப்புலிகள் மீதான எதிர்ப்பை தீவிரப்படுத்த தொடங்கினார். கடந்த 2005 ஆம் ஆண்டு அதிபர் பதவிக்கு போட்டியிட்டார் மகிந்த, அவருக்கு எதிராக ரணில் விக்ரமசிங்கே களமிறங்கினார். ஆனால் இந்த தேர்தலை புறக்கணிக்க முடிவெடுத்தது விடுதலைப்புலிகள் அமைப்பு. இதன் காரணமாக இத்தேர்தலில் மிக சொற்பமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார் ராஜபக்சே. கொலைவெறி தாக்குதல் இலங்கையில் 6வது அதிபராக 2005இல் பொறுப்பேற்ற மஹிந்த ராஜபக்சே, ஏற்கனவே இலங்கையில் கூர்மையடைந்திருந்த இன பாகுபாட்டை மேலும் கூர்தீட்டினார். இதன் தொடர்ச்சியாக இலங்கையில் விடுதலைப்புலிகள் மீதான போர் தீவிரமடைந்தது, இந்த போரில் தமிழர்களும் கொத்துக்கொத்தாக உயிரிழந்தனர். பள்ளிகள், மருத்துவமனைகள், கோயில்கள் என அனைத்து இடங்களிலும் குண்டுகள் வீசப்பட்டன. கொத்து கொத்தாக இலங்கையில் வசித்த தமிழர்கள் கொல்லப்பட்டனர். 2009ஆம் ஆண்டு மே மாதம் போர் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது.

குட்டிச்சுவராக்கிய குடும்ப அரசியல் ஆரம்பம் முதலே இலங்கை சுதந்திர கட்சியில் இருந்துவந்த மஹிந்த ராஜபக்சே, 2018ஆம் ஆண்டு அந்த கட்சியை உடைத்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எனும் புதிய கட்சியை உருவாக்கினார். மேலும், இவர் அரசியலில் இருந்தபோது இவரது தம்பிகள் கோத்தபாய ராஜபக்சே, பசில் ராஜபக்சே ஆகியோரை அரசியலில் அமைச்சர் உள்ளிட்ட உயர்பதவிக்கு கொண்டு வந்தார். 2019இல் நடந்த பொதுத்தேர்தலில் மீண்டும் வெற்றிபெற்று பிரதமரானார் மஹிந்த ராஜபக்சே. மஹிந்த ராஜபக்சேவின் தம்பி கோத்தபய ராஜபக்சே இலங்கையின் அதிபர் பதவியை வகிக்கிறார். மற்றொரு தம்பி பசில் ராஜபக்சே இலங்கையில் அமைச்சராக உள்ளார், ராஜபக்சேவின் மற்றோரு தம்பியான சமல் ராஜபக்சேவும் இலங்கையின் பாசனத்துறை அமைச்சராக உள்ளார் அவரின் மகன் நாமல் ராஜபக்சேவும் அமைச்சராக உள்ளார்.

மக்களின் கோப நெருப்பு இலங்கையை சுட்டெரித்துள்ளது. பற்றி எரிகிறது இலங்கை.. கோத்தபாய, மஹிந்தாவின் தந்தை ராஜபக்சேவின் நினைவு ஸ்தூபியை உடைத்தெரிந்த மக்கள் சிலையையும் உடைத்து சுக்குநூறாக வீசியுள்ளனர். பாகுபலி படத்தில் வில்லனாக வரும் பல்வால்தேவன் தங்க சிலையை மக்கள் உடைத்து வீசுவார்கள். சிலையின் தலை தனியாக துண்டிக்கப்பட்டு ஆற்றில் மிதந்து செல்லும் அதுபோல ராஜபக்சேவின் சிலை உடைக்கப்பட்டுள்ளது. குடும்ப அரசியலால் ஒரு நாடு எப்படி குட்டிச் சுவரானது என்பதற்கு இலங்கையே சாட்சி. நாட்டின் வளத்தை விட தன் குடும்ப வளமே முக்கியம் என்று நினைத்த ஆட்சியாளர்கள் என்னபாடு பட்டார்கள் என்பதற்கு ராஜபக்சேவின் குடும்பம் படும் பாடு தற்போது உலகத்திற்கே உதாரணமாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here