சென்னை : இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா பற்றி ஒரே வார்த்தையில் சிம்பிளாக, டைரக்டர் செல்வராகவன் சொன்ன ஒற்றை வார்த்தை ரசிகர்களை கவர்ந்தது. செம குஷியான ரசிகர்கள், கைதட்டல், விசில் என பட்டைகிளப்பி விட்டனர்.
சரத்குமார் நடித்த அரவிந்தன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இசையமைப்பாளராக அறிமுகமானவர் யுவன்சங்கர் ராஜா. இளையராஜாவின் மூத்த மகனான யுவன், இசையமைப்பாளர், பின்னணி பாடகர், தயாரிப்பாளர் என தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்து வருகிறார். இதுவரை 100 க்கும் அதிகமான படங்களில் யுவன் பணியாற்றி விட்டார்.
யுவனின் 25 ஆண்டுகள்: பிஜிஎம் கிங் என ரசிகர்களாலும், தமிழ் சினிமா துறையினராலும் புகழப்படும் யுவன், 1996 ம் ஆண்டு தனது 16வது வயதில் தனது திரையுலக இசை பயணத்தை துவக்கினார். அஜித்தின் பல படங்களுக்கு யுவன் இசையமைத்துள்ளார். பல விருதுகளையும் வென்றுள்ளார். யுவன், தமிழ் சினிமாவிற்கு வந்து 25 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. இதனை தமிழ் சினிமா கொண்டாடி வருகிறது.
செல்வராகவன் சொன்ன ஒரு வார்த்தை விழாவில் யுவன் பற்றி பேசிய செல்வராகவன், அவர் என்றைக்கும் உணர்ச்சி வசப்பட்டோ, சோகமாக இருந்தோ நான் பார்த்ததே இல்லை. எந்த சூழ்நிலையாக இருந்தாலும் அவரது முகத்தில் ஒரு ஸ்மைல் இருந்து கொண்டே இருக்கும். யுவன் பற்றி ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமானால், “நண்பேன்டா”. ஏன் என்றால் எவ்வளவு கஷ்டமான சூழல், பொருளாதார நெருக்கடியில் பணம் எடுத்துக் கொண்டிருக்கிறோம் யாரும் பாடலுக்கு இசையமைத்து தர மாட்டார்களே. சரி யுவனிடம் கேட்டு பார்க்கலாம் என நினைத்து கேட்டால், கொஞ்சும் யோசிக்காமல், ஓகே பண்ணி விடலாம் என்பார்.