விஜய் : தமிழ் சினிமாவில் இப்போது அதிக சம்பளம் வாங்கும் டாப் நடிகர் என்றால் அது தளபதி விஜய். இவர் தான் நடித்து வரும் தளபதி 66 படத்துக்கு 110 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளார் என கூறுகின்றனர். இவ்வளவு சம்பளம் வாங்கும் விஜய், தனது அம்மா ஷோபா, மனைவி சங்கீதா மற்றும் மகன் சஞ்சய் பெயரில் தனித்தனியாகத் திருமண மண்டபங்களை நடத்தி வருகிறார்.
நடிகர் சூர்யா : அகரம் ஃபவுண்டேஷன் கீழ் நூற்றுக்கணக்கான ஏழை மாணவர்களின் கல்வி செலவுகளைச் செய்து வருகிறார். இவரது தொண்டு நிறுவனத்தின் கீழ் படித்த மாணவர்கள் இப்போது மருத்துவர்கள், இன்ஜினியர்கள், அரசு அதிகாரிகளாகவும் இருக்கிறார்கள். இவருக்குக் கோயம்புத்தூர் அருகில் சொந்தமாக ஒரு காற்றாலை இருப்பதாகக் கூறப்படுகிறது. திரைத்துறைக்கு வரும் முன்பு கார்மெண்ட்ஸ் நிறுவனத்தில் வேலை செய்து வந்தவர் சூர்யா. இவருக்கு நீண்ட காலமாக ஒரு கார்மெண்ட்ஸ் நிறுவனம் தொடங்க வேண்டும் என்பது கனவு. அதை விரைவில் தொடங்க திட்டமிட்டு வருவதாகக் கூறுகின்றனர்.
நயன்தாரா :நடிகை நயன்தாரா காஸ்மெடிக் ரீடெய்ல் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இதில் உலகின் பிராலமான லிப்ஸ்டிக் தயாரிப்புகள் அனைத்தும் கிடைக்கும் என்ற கூறுகின்றனர். அதுமட்டுமல்லாமல் சாய் வாலே ரெஸ்டாரண்ட் ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் ஏஞ்சல் முதலீட்டாளராகவும் நயன்தாரா உள்ளார்.
அனிருத் : கோலிவுட்டின் ராக் ஸ்டார் என இப்போது அழைக்கப்படுபவர் இசையமைப்பாளர் அனிருத். ரஜினி, கமல் , விஜய் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் அனைவரின் படங்களுக்கும் இப்போது இவர் இசையமைத்து வருகிறார். இவருக்குச் சொந்தமாக ‘தி சம்மர் ஹவுஸ் ஈட்டரி’ என்ற ரெஸ்டாரண்ட் சென்னையில் உள்ளது.
தமன்னா : நடிகை தமன்னா, தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்து வருவது ஒரு பக்கம் இருந்தாலும், சொந்தமாக White & Gold என்ற ஆன்லைன் ஜூவல்லரி நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.
காஜல் அகர்வால் : நடிகை காஜல் அகர்வால் மும்பை தொழிலதிபர் கவுதம் கிச்சுலு என்பவரைத் திருமணம் செய்திருந்த நிலையில், இப்போது அவரது கணவருடன் இணைந்து வணிகத்தையும் கவனித்து வருகிறார் என கூறுகின்றன. மேலும் இவரும் மார்ஷல் ஜூவல்லரி என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
ஆர்யா: நடிகர் ஆர்யா ஷீ ஷெல் என்ற பிரபலமான அரேபிய உணவகத்தை நடத்தி வருகிறார். அதுமட்டுமல்லாமல் இவருக்கு தி ஷோ பீப்பள் என்ற சொந்த ப்ரோடக்சன் நிறுவனமும் உள்ளது.
ராம் சரண் : மகதீரா, ஆர்.ஆர்.ஆர் படம் மூலம் தமிழ் ரசிகர்களைக் கவர்ந்த நடிகர் ராம் சரண், ஹைதரபாத்தை தலைமையிடமாகக் கொண்ட ட்ரூ ஜெட் என்ற விமான நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
பிரசாந்த் : நடிகர் பிரசாந்துக்கு சென்னை மற்றும் பெங்களூருவில் ஜாய் ஆலுகாஸ் என்ற பெயரில் நகை கடை உள்ளது.
ஜீவா :நடிகர் ஜீவா சென்னை தி.நகரில் சொந்தமாக 1 எம்பி என்ற பெயரில் ரெஸ்டாரண்ட் ஒன்றை நடத்தி வருகிறார்.