சென்னை : உலக சினிமா ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அவதார் 2 எப்போது ரிலீசாக போகிறது, எத்தனை மொழிகளில் ரிலீசாக போகிறது
ஹாலிவுட் டைரக்டர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 2009ம் ஆண்டு டிசம்பர் மாதம் உலகம் முழுவதும் வெளிவந்த படம் அவதார். எபிக் சையின்ஸ் ஃபிக்சன் படமான இதை ஜேம்ஸ் கேமரூனே எழுதி, இயக்கி, தயாரித்து, எடிட்டிங்கும் செய்திருந்தார். இந்த படம் உலகம் முழுவதும் 14,000 க்கும் அதிகமான தியேட்டர்களில் 3டி வெர்சனில் வெளியிடப்பட்டது.
அவதார் படத்தின் இரண்டாம் பாகமாக அவதார் 2 படத்தை இயக்கி உள்ளார் ஜேம்ஸ் கேமரூன். இந்த படத்தை 20th Century Studios தயாரித்துள்ளது. 2014 ம் ஆண்டே அவதார் 2 படத்தை எடுக்க திட்டமிட்டார் ஜேம்ஸ் கேரூன். ஆனால் 2017 ல் தான் இந்த படத்தை துவக்கினார். அவதார் 2 படத்துடன் சேர்ந்து அவதார் 3 படத்தையும் இயக்கி உள்ளார். 2020ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்த படத்தின் ஷுட்டிங் முடிக்கப்பட்டது. ஆனால் அதற்கு பிறகு கொரோனா பெருந்தொற்று காரணமாக படத்தின் பணிகள் நிறுத்தப்பட்டன.தற்போது அவதார் 2 படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் முடிக்கப்பட்டு ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அவதார் 2 படம் வரும் டிசம்பர் 16ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளது. உலகம் முழுக்க 160 மொழிகளில் அவதார் 2 ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவதார் 2 படம் 250 மில்லியன் டாலர் செலவில் எடுக்கப்பட்டுள்ளது.