தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஹாலிவுட் படம் தி கிரே மேன்.
இந்தப் படம் வரும் ஜூலை 22ம் தேதி நேரடியாக நெட்பிளிக்சில் வெளியாக உள்ளது.
படத்தில் கிறிஸ் இவான்ஸ், ஜெசிகா உள்ளிட்டவர்கள் முக்கியமான கேரக்டர்களில் நடித்துள்ளனர்.
படத்தில் தனுஷ் நெகட்டிவ் ரோலில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.
படத்தில் சிறப்பான ஸ்டண்ட் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக தெரிகிறது.
படத்தின் சூட்டிங், டப்பிங் பணிகளை தனுஷ் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாகவே முடித்து கொடுத்துவிட்டார்.
ஜூலை 22ம் தேதி படம் வெளியாகவுள்ள நிலையில் தற்போது படத்தின் போஸ்டர்கள் வெளியாகியுள்ளது.
கிறிஸ் இவான்ஸ் உள்ளிட்ட 4 பேரின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகியுள்ளன.
தனுஷ் போஸ்டர் வெளியிடப்படாததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.யினும் படம் ரிலீசாக ஏறக்குறைய இன்னும் 2 மாதங்களே உள்ளதால் தங்களை ஆசுவாசப்படுத்திக் கொண்டுள்ளனர்.