சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் தனது பூர்விக கிராமத்தில் அழகான வீடு ஒன்றை கட்டி புதுமனை புகு விழாவை இன்று நடத்தி உள்ளார். சமூக வலைதளங்களில் அதன் புகைப்படங்கள் வெளியாகி டிரெண்டாகி வருகின்றன.
சிவகார்த்திகேயன் நடிப்பில் வரிசையாக டான், எஸ்கே 20 மற்றும் அயலான் உள்ளிட்ட பல படங்கள் ரிலீசுக்கு காத்துக் கொண்டிருக்கின்றன.
அபார வளர்ச்சி மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட்டாக தொலைக்காட்சியில் அறிமுகமான சிவகார்த்திகேயன் விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளராக மாறினார். சின்னத்திரையில் இருந்து படிப்படியாக முன்னேறி சினிமாவில் ஹீரோவான சிவகார்த்திகேயன் கோலிவுட்டில் வசூல் மன்னனாக மாறி உள்ளார். கடந்த அவர் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படம் 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து அசத்தியது.
புது வீடு :நடிகர் சிவகார்த்திகேயன் தனது பூர்வீக கிராமத்தில் கட்டியுள்ள பிரம்மாண்ட புது வீட்டின் புகுமனை புகுவிழாவை இன்று நடத்தி உள்ளார். உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் மற்றும் இந்த விழாவில் பங்கேற்றுள்ளனர். தற்போது அதன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகின்றன.
அருவி இயக்குநர் :அருவி மற்றும் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியான வாழ் படங்களை இயக்கிய அருண் புருஷோத்தமன் மட்டுமே இந்த புதுமனை புகுவிழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாக தகவல்கள் கசிந்துள்ளன. மற்றபடி எந்தவொரு சினிமா பிரபலங்களுக்கும் நடிகர் சிவகார்த்திகேயன் அழைப்பு விடுக்கவில்லை என கூறப்படுகிறது.
வேட்டி சட்டையில் டான் மே மாதம் 12ம் தேதி சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், வேட்டி சட்டையில் செம க்யூட்டாக உறவினர்கள் மற்றும் ஊர் மக்களுடன் சிவகார்த்திகேயன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
ஆகஸ்ட்டில் அடுத்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு பைலிங்குவல் படமாக உருவாகி வரும் சிவகார்த்திகேயனின் 20வது படம் வரும் ஆகஸ்ட் மாதமே வெளியாகப் போவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கும் அயலான் திரைப்படத்தையும் விரைவில் ரிலீஸ் செய்ய ரசிகர்கள் கோரிக்கை வைத்து வரும் நிலையில், இந்த ஆண்டின் செகண்ட் ஹாஃப் முழுவதும் சிவகார்த்திகேயனின் ஆண்டாக மாறுமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.