கமல்ஹாசனின் விக்ரம் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலான “பத்தல பத்தல” பாடல் இன்று வெளியாகிறது.

0
90

சென்னை: கமல்ஹாசனின் விக்ரம் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலான “பத்தல பத்தல” பாடல் இன்று வெளியாகிறது.அது தொடர்பாக அந்த பாடலின் புதிய போஸ்டரை நடிகர் கமல்ஹாசன் ஷேர் செய்து ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளார்.விஸ்வரூபம் 2 படத்திற்கு பிறகு கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் விரைவில் திரைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் கமல், விஜய்சேதுபதி, பகத் ஃபாசில் நடிப்பில் உருவாகி உள்ள விக்ரம் படம் வரும் ஜூன் 3ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான பத்தல பத்தல பாடல் இன்று மாலை 7 மணிக்கு வெளியாக உள்ள அறிவிப்பை தற்போது கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here