ஹைதராபாத்தில் உள்ள கீதா ஆர்ட்ஸ் அலுவலகம் முன்பு தெலுங்கு நடிகை சுனிதா போயா போராட்டம்

0
63

தெலுங்கு சினிமா நடிகையாக விளங்குபவர் சுனிதா போயா. இவர் பல படங்களில் துணைப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் துணை நடிகையான சுனிதா, திரைப்படத்தில் நடிப்பதாக உறுதியளித்த பணத்தை தயாரிப்பு நிறுவனம் தரவில்லை என்று குற்றம்சாட்டி உள்ளார். இதையடுத்து அந்த படத்தின் தயாரிப்பாளரான Bunny வாசுவிடம் சம்பளத்தை கேட்டிருக்கிறார்.

பல முறை அவரிடம் சம்பளத்தை கேட்டும் அவர் தரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், ஆத்திரம் அடைந்த அந்த துணை நடிகை ஹைதராபாத் ஜுபிளி ஹில்ஸ் பகுதியில் இருக்கும் Bunnyவாசுவின் தயாரிப்பு நிறுவன அலுவலகத்தின் முன்பு அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டார் சுனிதா.

இதுகுறித்து, ஹைதராபாத் முனிசிபாலிட்டியில் வேலை செய்பவர்கள் சுனிதா போராட்டம் நடத்துவதை பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சுனிதாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவரை கைது செய்து அழைத்துச்சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த துணை நடிகை Bunny வாசுவுக்கு எதிராக சுனிதா போராட்டம் நடத்துவது இது முதல் முறை அல்ல. படங்களில் வாய்ப்பு தருவதாகக் கூறி வாசு என்னை ஏமாற்றிவிட்டார் என்று இதற்கு முன்பு நடிகை சுனிதா புகார் அளித்துள்ளார். அதேபோல, வாசுவின் அலுவலகம் தவிர்த்து தெலுங்கு பிலிம் சேம்பர் அலுவலகம் முன்பும் பலமுறை போராட்டத்தை நடத்தியிருக்கிறார். மேலும், கதி மகேஷ் திரைப்பட வேடங்களில் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றம் சாட்டியிருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here