விஷால் – எஸ்.ஜே சூர்யா நடிக்கும் ‘மார்க் ஆண்டனி’ படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது.

0
65

’வீரமே வாகை சூடும்’ படத்தினைத் தொடந்து விஷால் ‘லத்தி’, ‘மார்க் ஆண்டனி’ படங்களில் நடித்து வருகிறார். இதில், ‘மார்க் ஆண்டனி’ படத்தை ’த்ரிஷா இல்லனா நயன்தாரா’, ’AAA’ படங்களை இயக்கி சர்ச்சையை ஏற்படுத்திய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். மினி ஸ்டுடியோஸ் சார்பில் ’எனிமி’ படத் தயாரிப்பாளர் வினோத் குமார் தயாரிக்கிறார். ’மாநாடு’ வெற்றிக்குப்பிறகு எஸ்.ஜே சூர்யா வில்லனாக நடிக்கிறார். சமீபத்தில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி கவனம் ஈர்த்தது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது. அதில், விஷால், எஸ்.ஜே சூர்யா, ஆதிக் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஏற்கனவே, இப்படத்தில் நடிப்பது குறித்து எஸ்.ஜே சூர்யா, ”கடவுளே, எல்லா நல்ல கதைகளையும் என்னிடமே அனுப்புகிறாயே. ஆதிக் ரவிச்சந்திரன் சொன்ன கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. கண்டிப்பாக இந்தப் படம் வெற்றிபெறும். இந்தப் படத்தை ‘மாநாடு 2’ என சொல்லலாம். அப்படி ஒரு திரைக்கதை” எனத் தெரிவித்திருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here