ஆண்டிப்பட்டி அருகே, கோவில் விழாவில் ஒருவரை ஒருவர் துடைப்பத்தால் அடித்துக் கொள்ளும் விநோத நிகழ்ச்சி நடைப்பெற்றது.

0
61

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே உள்ள மறவபட்டி கிராமத்தில் முத்தாலம்மன் கோவிலின் சித்திரை திருவிழா ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக இந்த திருவிழா கொண்டாடப்படாத நிலையில், இந்த ஆண்டுக்கான திருவிழா மூன்று நாட்களுக்கு முன்பு கொடியேற்றத்துடன் தொடங்கியது.

மொத்தம் 3 நாட்கள் கொண்டாப்படும் இந்த திருவிழாவில் முதல் இரண்டு நாட்களில் வழக்கமாக திருவிழாக்களில் நடத்தப்படும், பொங்கல் வழிபாடு, முளைப்பாரி, தீச்சட்டி ஊர்வலம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும். விழாவின் கடைசி வழக்கமாக கோவில் திருவிழாக்களில் கிராமத்தில் உள்ள மக்கள் தங்களின் மாமன், மைத்துனர்கள் மீது மஞ்சள் தண்ணீரை ஊற்றி கொண்டாடுவார்கள்.

ஆனால், மறவப்பட்டி கிராமத்தில் விழாவின் கடைசி நாளில் அந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் ஒருவரை ஒருவர் துடைப்பத்தால் அடித்துக் கொள்ளும் வினோதமான நிகழ்ச்சி பாரம்பரியமாக நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, திருவிழாவின் கடைசி நாளான நேற்று, அந்த கிராமத்தில் உள்ள மக்கள் தங்களின் மாமன் மைத்துனர்களை துடைப்பத்தால் அடித்துக்கொண்டு தங்களின் பாரம்பரிய முறையில் கொண்டாடி மகிழ்ந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here