சென்னை: தமிழ்நாட்டில் சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்,
போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி, தமிழ்நாட்டில் அரசு பேருந்துகளில் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு இனி கட்டணம் வசூலிக்கப்படாது என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் அறிவித்துள்ளார்,
தற்போது 3 வயது வரை கட்டணம் இல்லாமல் குழந்தைகள் பயணித்து வருகிறார்கள். இதனிடையே இனி வரும் காலத்தில் 5 வயது வரை உள்ள குழந்தைகள் கட்டணம் எதுவும் செலுத்தாமல் பயணிக்கலாம் என்று அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் அறிவித்துள்ளார். அனைத்து வகையான பேருந்துகளிலும் 5 வயது வரை உள்ள குழந்தைகள் பயணிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு திமுக அரசு ஆட்சிக்கு வந்த போது, சில முக்கிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டது. அதில் மாநகர பேருந்துகளில் பெண்கள் இலவசமாகப் பயணிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே, நகர் பேருந்துகளில் மகளிர் இலவசமாகப் பயணிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு நிலையில், இப்போது 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கும் கட்டணம் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.