மிஷ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா, விஜய்சேதுபதி உள்ளிட்ட பலரும் நடிக்கும் பிசாசு 2 படத்தின் டீஸர் காட்சிகள் வெளியாகியுள்ளது. இன்று மாலை 5 மணிக்கு வெளியிடப்படும் என்று ஏற்கனவே படக்குழுவினலார் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சினிமா பிரபலங்களான எஸ்.ஜே.சூர்யா, விஜய் ஆண்டனி, மஞ்சு வாரியர், வானி போஜன் உள்ளிட்ட பலரும் தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரே நேரத்தில் இந்த டீஸரை வெளியிட்டுள்ளனர்.
Horror காட்சிகளும் அதிகம் இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், குழந்தைகளை இந்த டீஸரை பார்க்கவிடாதீர்கள் என்று படக்குழுவினரே ‘disclaimer card’ போட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.