அனைத்து மாநிலங்களிலும் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மார்ச் மாதம் முதல் வாரத்திலிருந்து ஏப்ரல் முதல் வாரம் வரை தேர்வுகள் நடத்தப்பட்டு விடுமுறைகள் விடப்பட்டிருக்கும். அதுமட்டுமின்றி 1 முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஏப்ரல் மாதத்தில் முழு ஆண்டு தேர்வு ஏப்ரல் மாத இறுதி வரை நடத்தப்பட்டு மே மாதம் முதல் வாரத்தில் இருந்து ஜூன் மாதம் வரை விடுமுறை விடப்படுவது குறிப்பிடத்தக்கது. மேலும் இரண்டு வருடமாக கொரோனா வைரஸ் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டிருந்த நிலையில் நடப்பு கல்வி ஆண்டில் இரண்டாம் அலை காரணமாக ஜூன் மாதத்திற்கு பதிலாக செப்டம்பரில் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமின்றி மூன்றாவது அலையால் மூடப்பட்ட பள்ளிகள் பிப்ரவரி மாதத்தில் திறக்கப்பட்டது. இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனால் மாணவர்களுக்கு சனிக்கிழமைகளில் கூட பள்ளிகள் திறக்கப்பட்டு வந்தன. அதிகமான விடுமுறைகள் விடப்பட்டதால் 1 முதல் 9ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு மே 13 வரை தேர்வுகள் நடத்தப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்த நிலையில் அது சட்டப்படி குற்றம் எனவும் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களை தவிர மற்ற வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு வெயில் நேரத்தில் பள்ளிகளுக்கு வர வைப்பது மனித உரிமை மீறலாகும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் தவிர மற்ற மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி என அறிவிக்கப்பட வேண்டும் எனவும் புதுவையில் 9ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களை தேர்ச்சி என அறிவிக்கப்பட்டதை அவர் முன்னுதாரணமாக கூறியுள்ளார். சிபிஎஸ்இ மாணவர்களுக்கு கோடை வெயிலின் காரணமாக மே 2 முதல் விடுமுறை அளிக்க தொடங்கியுள்ளது எனவும் அதேபோல் அரசு பள்ளி மாணவர்களுக்கும் மே 2 முதல் விடுமுறை விட வேண்டும் என அறிவித்திருக்கிறார். மேலும் கல்லூரி மாணவர்களுக்கும் சனிக்கிழமைகளில் விடுமுறை அளிக்க வேண்டும் எனவும் கூறியிருக்கிறார்.