சென்னை : நடிகர் விஜய்சேதுபதி நடிக்கும் “காந்தி டாக்ஸ்” திரைப்படம் குறித்த ஹாட் அப்டேட் வெளியாகி உள்ளது.
நடிகர் விஜய் சேதுபதி அடுத்து நடிக்கும் “காந்தி டாக்ஸ்” திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கி உள்ளது. இந்தியில் தயாராகும் இந்த படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி மொழிகளிலும் வெளியாக உள்ளது. கிஷோர் பாண்டுரங் பலேகர் என்ற மராத்தி இயக்குநரின் இயக்கத்தில் உருவாக உள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க உள்ளார்.
அரவிந்த்சாமி, அதிதீ ராவ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் சிறப்பு அம்சம் என்னவென்றால் இத்திரைப்படம் ஒரு மௌன திரைப்படமாகும். 1987ம் ஆண்டு கமல், அமலா நடித்த பேசும்படத்திற்கு பிறகு வசனமே இல்லாத ஒரு படத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார். விஜய் சேதுபதியின் காந்தி டாக்ஸ் திரைப்படமும் வெற்றிப்படமாக அமைய ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்