கடும் விமர்சனங்களை சந்தித்த பீஸ்ட் படம் பல இடங்களில் கடுமையைன வசூல் இழப்பை சந்தித்து இருக்கிறது. கேரளா உள்ளிட்ட பல இடங்களில் படம் பல கோடி நஷ்டம் என தகவல் வருகிறது.
இந்நிலையில் தற்போது கூர்கா படத்தை இயக்கிய சாம் அன்டன் அளித்திருக்கும் பேட்டியில் பீஸ்ட் படத்தின் ட்ரோல்களுக்கு பதிலடி கொடுத்து இருக்கிறார்.
“பீஸ்ட் படத்தை நான் மூன்று முறை பார்த்தேன். ஹாலிவுட்டில் கிறிஸ்துமஸ் படங்கள் என இருக்கிறது. எல்லா படங்களும் கிட்டத்தட்ட ஒரே idea மாதிரி தான் இருக்கும். நான் வசீகரா படத்தை 10 முறை பார்த்திருக்கிறேன். அது விஜய் experiment செய்தது. அதற்கு பிறகு புலி. இதுவரை செய்யாதா ஒரு மால் heist கதையை எடுத்து செய்திருக்கிறார். கூர்காவில் ஹீரோ காமெடியன், ஆனால் அதில் விஜய் பெரிய ஆள்.”
“அப்படி பார்த்தால் புஷ்பா படமும் கேப்டன் பிரபாகரன் ஒன்று தானே. அதில் ஆட்டமா தேரோட்டமா பாட்டு வரும், இதில் ஊ அண்டாவா என்ற பாட்டு இருக்கும். அப்படி எதுவும் இல்லை. இரண்டும் வெவ்வேறு படங்கள்” என சாம் ஆண்டன் கூறி இருக்கிறார்.