இளையராஜா விவகாரம்…….. கங்கை அமரன் கடும் கோபம்

0
60

பிரதமர் மோடியை அண்ணல் அம்பேதக்ருடன் ஒப்பிட்ட ஒரு புத்தகம் அண்மையில் வெளியாகி இருந்தது. இப்புத்தகத்துக்கு இசையமைப்பாளர் இளையராஜா முன்னுரை எழுதி இருந்தார்.

அந்த முன்னுரையில், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் பல திட்டங்கள், அம்பேத்கரது சிந்தனையை அடிப்படையாக கொண்டவை; முத்தலாக் தடை சட்டம் போன்றவற்றால் அம்பேத்கர் பெருமிதப்பட்டிருப்பார் என இளையராஜா எழுதி இருந்தார். இது மிகப் பெரும் சர்ச்சையானது. இருந்த போதும் பிரதமர் மோடி குறித்த கருத்துகளை திரும்பப் பெற முடியாது என இளையராஜா கூறினார்.

இதனிடையே ஐ தமிழ்-க்கு இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரன் ஒரு பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் இளையராஜா சர்ச்சை குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு கங்கை அமரன் அளித்த பதில்: இளையராஜாவுக்கு பதில் நான் முன்னுரை எழுதி கொடுத்தேன் என்பவர்கள், இளையராஜாவுக்கு பதில் நான் இசை அமைத்தேன் என்பார்களா? அப்படி சொல்வார்களா? இளையராஜா அப்படி எழுதி இருக்கிறார்… இப்படி எழுதி இருக்கிறார் என நோண்டி நோண்டி ஆராய்ச்சி செய்கிறார்கள்.

15,16 புத்தகம் எழுதின அறிவாளிக்கு நான் முன்னுரை எழுதி கொடுத்தேன்னு எவன் சொன்னான்? என்னய்யா பெரிய சமூகம் சமூகம்? நேரா என்கிட்ட போய் குற்றவாளி மாதிரி இளையராஜாவுக்கு நீதான் முன்னுரை எழுதின என கேட்கிற? யோவ்… பொறுய்யா… பொறுய்யா.. ஆமா நான் தான் எழுதினேன்.. அந்த முன்னுரை நான் தான் எழுதினேன்.. நீ என்ன பண்ணுவ? இப்படி எல்லாம் பேசுறவன் முட்டாள், அறிவே இலாத நாய்..

மோடியை ஏன் அம்பேத்கருடன் ஒப்பிடக் கூடாது? மோடியை அம்பேத்கருடன் ஒப்பிடுவது என் இஷ்டம்.. எனக்கு பிடிக்கும்… ஏய்.. அம்பேத்கர் என்ன சொன்னார்னு உனக்கு தெரியுமா? ஏய்.. பொறுய்யா.. வாயை மூடு..ஏய்… அம்பேத்கர் என்ன சொன்னார்னு தெரியுமா? இளையராஜா எழுதின முன்னுரையை படிச்சியா நீ? அம்பேத்கரை திருமாவளவுடன் ஒப்பிட்டு பேசுகிறீங்க.. மோடியுடன் ஏன் ஒப்பிட்டு பேசக் கூடாது? இவ்வாறு கங்கை அமரன் கடும் கோபத்துடன் கேள்வி எழுப்பினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here