இந்த விலைக்கு இப்படி ஒரு சைக்கிளா?

0
58

உலகம் முழுவதும் ஏராளமான சைக்கிள் உற்பத்தி நிறுவனங்கள் இருக்கின்றன. அந்த நிறுவனங்களை மட்டுமே சைக்கிள் ஆர்வலர்கள் அதிகம் விரும்புகின்றனர். அப்படிப்பட்ட நிறுவனங்களில் ஒன்றுதான் ஃபயர்ஃபாக்ஸ் (Firefox). பிரீமியம் சைக்கிள் செக்மெண்ட்டில், ஃபயர்ஃபாக்ஸ் நிறுவனம் வலுவான இடத்தை பிடித்துள்ளது.

அன்பாக்ஸிங் & அசெம்ப்ளி

பாக்ஸின் இரண்டு பக்கமும் ‘Firefox Superbike’ என எழுதப்பட்டிருந்தாலும், உற்சாகம் பல மடங்கு அதிகரித்து விடும். உங்கள் வாழ்க்கையின் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்தப்படும் மற்றும் உடல் நலத்திற்கு உகந்த சைக்கிள் உள்ளே இருக்கிறது என்பதுதான் இந்த வார்த்தைக்கான அர்த்தம்.

இந்த அன்பாக்ஸிங் செயல்முறைகள் மிகவும் எளிமையாக இருந்தது. மேலே உள்ள ஸ்ட்ராப்களை வெட்டி, பெட்டியை மேலே தூக்கினால், கவர்ச்சிகரமான ஃபயர்ஃபாக்ஸ் சைக்கிள் நமக்கு தரிசனம் தருகிறது. ஃபயர்ஃபாக்ஸ் நிறுவனம் சிறப்பாக விற்பனையாகும் ஒரு தயாரிப்பை எங்களுக்கு அனுப்பியிருந்தது. ஆம், ஃபயர்ஃபாக்ஸ் பேட் ஆட்டிடியூட் X (Firefox Bad Attitude X) சைக்கிளை பற்றிதான் நாங்கள் இங்கே பேசி கொண்டுள்ளோம்.

இங்கே ‘X’ என்பது ரோமன் எண் ஆகும். எனவே இதனை ‘ஃபயர்ஃபாக்ஸ் பேட் ஆட்டிடியூட் 10’ என்றுதான் சொல்ல வேண்டும். ஒரு சிலர் இதனை ஆங்கில எழுத்தான ‘எக்ஸ்’ (X) என்று புரிந்து கொள்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன என்பதால், ஆரம்பத்திலேயே தெளிவுபடுத்தி விடுகிறோம். பாக்ஸில் இருந்து வெளியே எடுத்தவுடன், ஓட்டக்கூடிய கண்டிஷனில் இந்த சைக்கிள் இல்லை. ஒரு சிலவற்றை அசெம்பிள் செய்ய வேண்டியிருந்தது. ஆனால் அதனை நாம் வீட்டிலேயே செய்து விடலாம்.

ஹேண்டில்பாரை நேராகவும், ‘டைட்’ ஆக்கவும் வேண்டியிருந்தது. அத்துடன் பெடல்களையும் பொருத்த வேண்டியிருந்தது. மேலும் இருக்கையையும் அட்ஜெஸ்ட் செய்ய வேண்டியிருந்தது. இதையெல்லாம் செய்து முடிக்க எங்களுக்கு 5 நிமிடங்களுக்கு மேல் ஆகவில்லை. இதன்பின் இந்த சைக்கிளை ஓட்டி பார்க்க நாங்கள் தயாராகி விட்டோம். இந்த தகவல்களுக்கு முன்னால், இந்த சைக்கிளின் டிசைன் உள்ளிட்ட ஒரு சில முக்கியமான அம்சங்களை உங்களுக்கு கூறி விடுகிறோம்.

டிசைன்

தற்போது சைக்கிள்கள் தரமாக டிசைன் செய்யப்படுகின்றன. சைக்கிள்களை பொறுத்தவரையில், ரோடு பைக்குகள், ஹைப்ரிட் பைக்குகள் மற்றும் மவுன்டெயின் பைக்குகள் என பல்வேறு செக்மெண்ட்கள் இருக்கின்றன. பெரும்பாலான உற்பத்தியாளர்களுக்கு ஸ்டாண்டர்டான ஃப்ரேம் டிசைன் இருக்கிறது. ஒரு சில பிரத்யேகமான சைக்கிள்கள் மட்டுமே வித்தியாசமான ஃப்ரேமை பெறுகின்றன.

ஃபயர்ஃபாக்ஸ் நிறுவனம் இந்த சைக்கிளை, மவுன்டெயின் பைக் என வகைப்படுத்தியுள்ளது. எனவே ஃப்ரேம் டிசைன் வழக்கத்திற்கு மாறான ஒன்றாக இல்லை. இந்த சைக்கிளில் பின் பகுதி சஸ்பென்ஸன் இல்லை. அதே நேரத்தில் முன் பகுதியில் டெலஸ்கோபிக் ஃபோர்க், சஸ்பென்ஸன் பணிகளை கையாள்கிறது.

இது ஹார்டுகோர் மவுன்டெயின் பைக் கிடையாது. இந்த சைக்கிளின் டிசைன், கிட்டத்தட்ட இதனை ஹைப்ரிட் சைக்கிள் வகைக்குள் தள்ளுகிறது. டிஎஸ்ஐ (DSI) நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ள இந்த சைக்கிளின் டயர்கள், நல்ல க்ரிப்பிற்கு உத்தரவாதம் தருகின்றன. பார்ப்பதற்கு அவை முரட்டுத்தனமாக காட்சியளிக்கின்றன.

இந்த சைக்கிளின் பெயிண்ட் வேலைப்பாடுகள் அருமையாக இருக்கின்றன. பாட்டில் க்ரீன் மற்றும் ஆலிவ் க்ரீன் கலவையில் இந்த சைக்கிள் இருப்பதை போல் தோன்றுகிறது. ஆனால் ஃபயர்ஃபாக்ஸ் நிறுவனம் இதனை வெறும் ‘க்ரீன்’ என்று மட்டுமே குறிப்பிடுகிறது. இந்த சைக்கிள் இந்த ஒரே ஒரு வண்ண தேர்வில் மட்டுமே கிடைக்கும். வேறு வண்ண தேர்வுகள் இல்லை.

இருப்பினும் அது ஒரு குறையல்ல. ஒரே ஒரு வண்ண தேர்வில் மட்டுமே கிடைக்கிறது என்றாலும், க்ரீன் மட்டுமே இந்த சைக்கிளில் இருக்கும் ஒரே ஒரு நிறம் கிடையாது. இந்த சைக்கிளில் கருப்பு நிறத்தை நம்மால் மிகுதியாக காண முடிகிறது. அத்துடன் லைட் ப்ளூ நிறமும் இந்த சைக்கிளில் இடம்பெற்றுள்ளது. முன் பகுதியில் உள்ள ஃபோர்க் கருப்பு நிறத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் இதில் ஃபயர்ஃபாக்ஸ் லோகோவும் இடம்பெற்றுள்ளது.

இந்த சைக்கிளை டிசைனர்கள் வண்ணங்களை தெறிக்க விட்டதை போல் உருவாக்கியுள்ளனர். ‘பேட் ஆட்டிடியூட்’ என்ற பெயருடன் இது நன்றாக பொருந்தி போகிறது. அதே நேரத்தில் ஃப்ரேமின் டவுன் ட்யூப்பில், ஃபயர்ஃபாக்ஸ் லோகோ மற்றும் பேட்ஜ் கருப்பு நிறத்தில் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இதன் பின்னணி ப்ளூ கலரில் இருக்கிறது. இவை அனைத்தும் ஒன்று சேர்ந்து இந்த சைக்கிளை கவர்ச்சிகரமான தயாரிப்பாக மாற்றியுள்ளன. அதே சமயம் ரிம் மற்றும் ஸ்போக்குகள் கருப்பு நிறத்தில்தான் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆனால் கியர்கள் வெண்கல நிறத்தில் உள்ளன.

இந்த சைக்கிளின் டவுன்ட்யூப்பில் பாட்டில் ஹோல்டருக்கான பாயிண்ட்கள் இருக்கின்றன. ஆனால் பாட்டில் ஹோல்டர் ஆக்ஸஸரீயாக மட்டுமே கிடைக்கும். எனவே அதனை தனியாக ஆர்டர் செய்து கொள்ள வேண்டும். அதேபோல் ‘டீரெய்லர் ப்ரொடெக்டர்’ (Derailleur Protector) இல்லாததும் ஒரு குறை. ஆஃப்ரோடு சைக்கிள்களுக்கு இது மிகவும் அவசியமானது. தேவைப்பட்டால் இதையும் தனியாகதான் வாங்கி கொள்ள வேண்டும். அத்துடன் உங்களுக்கு ‘பெல்’ தேவை என்றாலும், தனியாகதான் வாங்க வேண்டும்.

இந்த சைக்கிளின் பின் பக்க சப்-ஃப்ரேமில் எழுதப்பட்டுள்ள வாசகம் கவனம் ஈர்க்கிறது. இந்த சைக்கிள் எதைப்பற்றியது? என்பதையும் அது குறிக்கிறது. ‘Shut Up And Ride’ என்பதுதான் அந்த வாசகம். இது இதனை இந்த சைக்கிளின் தன்மை மற்றும் அணுகுமுறையை வரையறுக்கும் ஒரு ஸ்டேட்மெண்ட்டாக கருதலாம்.

ரைடு & ஹேண்ட்லிங்

ஃபயர்ஃபாக்ஸ் நிறுவனம் இதனை மவுன்டெயின் பைக் என வகைப்படுத்தியிருந்தாலும், நாங்கள் ஏற்கனவே கூறியபடி இதன் டிசைன், ஹைப்ரிட் வகைக்குள் இந்த சைக்கிளை தள்ளுகிறது. இதற்கேற்ப இந்த சைக்கிளை வாங்க கூடிய பலர் பெரும்பாலான நேரங்களில் சாதாரண சாலைகளில்தான் பயன்படுத்துவார்கள். ஆஃப்ரோடு பயணங்கள் அடிக்கடி நடக்க கூடிய ஒன்றாக இருக்காது.

நாங்கள் வழக்கமான சாலைகளில் இந்த சைக்கிளை சில நூறு கிலோ மீட்டர்கள் ஓட்டினோம். ஆனால் ஆஃப் ரோடில் 10 கிலோ மீட்டர்கள் மட்டுமே ஓட்டினோம். இந்த பயணத்தை நாங்கள் ஒரேயடியாக செய்து விடவில்லை. சில மாதங்களில் நாங்கள் இதனை செய்து முடித்தோம். நாங்கள் எதிர்பார்த்ததை போலவே, ரைடு மற்றும் ஹேண்ட்லிங் தொடர்பாக புகார் சொல்வதற்கு இந்த சைக்கிளில் எதுவுமே இல்லை.

இந்த சைக்கிளை ஓட்ட தொடங்கிய உடனேயே, இதன் ரைடிங் பொஷிஷன் ஹார்டுகோர் மவுன்டெயின் பைக் போன்று இல்லை என்பதை உணர முடிகிறது. ஆனால் இது இருக்கையின் உயரத்தை பொறுத்தது. இந்த சைக்கிளின் இருக்கையை உங்கள் தேவைக்கு ஏற்ப அட்ஜெஸ்ட் செய்து கொள்ள முடியும். அதே நேரத்தில் இந்த சைக்கிளின் ஹேண்டில்பார் கச்சிதமாக இருக்கிறது. அமர்ந்த நிலையிலும், எழுந்த நிலையிலும் இந்த சைக்கிளை ஓட்டுவது எளிமையாக உள்ளது. அத்துடன் இந்த சைக்கிளின் இருக்கைகளும் சௌகரியமாக இருக்கின்றன. ஃபயர்ஃபாக்ஸ் இணையதளத்தில் மெமரி ஃபோம் சீட்கள் கிடைக்கின்றன. தேவைப்பட்டால் நீங்கள் வாங்கி கொள்ளலாம்.

அதே நேரத்தில் இந்த சைக்கிளின் டிரைவ்ட்ரெயின் நம்ப முடியாத அளவிற்கு மென்மையாக உள்ளது. இந்த சைக்கிளின் ஒட்டுமொத்த கியர்ஷிஃப்டிங் மெக்கானிசமும், மைக்ரோஷிஃப்ட் நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்டுள்ளன. இதில், ஷிஃப்டர்கள், கேபிள்கள் மற்றும் டீரெய்லர்கள் ஆகியவை அடங்கும். மைக்ரோஷிஃப்ட் நிறுவனம் இந்த தொழிலில் மிக நீண்ட காலமாக இருக்கிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

இந்த சைக்கிளில் ஷிஃப்டர்கள் தனித்துவமாக உள்ளன. கியர்களை கூட்டுவது மற்றும் குறைப்பது என இரண்டையும் கட்டை விரல் மூலமாக கையாளலாம். ஆரம்பத்தில் இது குழப்பமாக இருந்தாலும் கூட, நாளடைவில் பழகி விடும். இந்த சைக்கிளின் கியர் பொஷிஷன் இன்டிகேட்டர் சிறப்பாக இருக்கிறது. ஆனால் ரீட்அவுட் சற்று குழப்பமாக உள்ளது.

ஹேண்டில்பாரின் இடது பக்கத்தில் உள்ள ஷிஃப்டர் மூன்று டிரைவ் ரேஷியோக்களை கையாள்கிறது. இதற்கான இன்டிகேட்டரில், 1 & 3 என எழுதப்பட்டுள்ளது. எனவே இன்டிகேட்டர் நடுவில் இருந்தால், அது 2வது கியர்/ரேஷியோ என கூறி விடலாம். அதே நேரத்தில் ஹேண்டில்பாரின் வலது பக்கத்தில் பின் பகுதியை கையாளும் ஷிஃப்டர் உள்ளது. இதில் 1 & 7 என குறிக்கப்பட்டுள்ளது. இங்கே இன்டிகேட்டர் நடுவில் இருந்தால், அது 3வது கியரா? 4வது கியரா? அல்லது 5வது கியரா? என்பதை கணிப்பது கடினம். நீங்கள் எந்த கியரில் சென்று கொண்டுள்ளீர்கள்? என்பதை தெரிந்து கொள்வதில் ஆர்வமாக இருந்தால், இது உங்களை எரிச்சலடைய செய்யும். ஒருவேளை உங்களுக்கு அது தேவையில்லை என்றால், ஒரு பிரச்னையும் கிடையாது. இந்த சைக்கிள் முன் பகுதியில் 3 ஸ்பீடுகளையும், பின் பகுதியில் 7 ஸ்பீடுகளையும் பெற்றுள்ளது. எனவே இதன் கியர் ரேஷியோ 21 ஆகும்.

.அதே நேரத்தில் இந்த சைக்கிளின் டயர்களை பற்றி இந்த செய்தியில் குறிப்பிட்டே ஆக வேண்டும். நீங்கள் எந்த வகையான சாலையில் இந்த சைக்கிளை ஓட்டினால், இந்த டயர்கள் சிறப்பான க்ரிப்பை வழங்குகின்றன. அதே சமயம் இந்த சைக்கிளின் முன் மற்றும் பின் பகுதிகளில் பெட்டல் டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்பட்டுள்ளன. இவை சிறப்பாக செயலாற்றுகின்றன. நீங்கள் வேகமாக சென்றாலும், அவை சைக்கிளை விரைவாக நிறுத்துகின்றன. இது உங்களுக்கு சிறப்பான அனுபவத்தை வழங்கும்.

நீண்ட கால செயல்திறன்

நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டதை போல், இந்த சைக்கிளை நாங்கள் நீண்ட காலம் சோதனை செய்தோம். சுமார் 6 மாதங்கள் நாங்கள் இந்த சைக்கிளை பயன்படுத்தினோம். நாளடைவில் இந்த சைக்கிள் பிரச்னைகளை வெளிப்படுத்தலாம் என நாங்கள் நினைத்தோம். ஆனால் அதற்கான எந்த அறிகுறிகளும் இல்லை. நீண்ட கால பயன்பாட்டிற்கும் இந்த சைக்கிள் சிறப்பாக இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் இந்த சைக்கிள் புத்தம் புதியதை போன்றே உள்ளது.

இந்த சைக்கிளின் மெக்கானிக்கல் அம்சங்களும் கூட தொடர்ந்து சிறப்பாகவே வேலை செய்கின்றன. இத்தனைக்கும் நாங்கள் பெரிதாக எந்தவொரு பராமரிப்பு பணிகளையும் செய்யவில்லை. அப்படி இருக்கும்போதே இந்த சைக்கிள் தொடர்ந்து சிறப்பாக இருக்கிறது. நீண்ட ஆயுட்காலம் என பார்த்தால், இந்த சைக்கிளுக்கு முழு மதிப்பெண்களை அப்படியே கொடுக்கலாம்.

ஆக்ஸஸரீகள் & விலை

நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டதை போல், இந்த சைக்கிள் ஒரே ஒரு வண்ண தேர்வில் மட்டுமே கிடைக்கும். நாங்கள் 2021ம் ஆண்டின் இறுதியில் இந்த சைக்கிளை பெற்றோம். அப்போது அதன் விலை 15,800 ரூபாய் மட்டுமே. ஆனால் 2022ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இதன் விலை 17,500 ரூபாய் ஆகும். அதாவது 1,700 ரூபாய் விலை உயர்ந்துள்ளது. வரும் காலங்களிலும் இதன் விலை மேலும் உயர்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. விலை தொடர்பான துல்லியமான தகவல்களுக்கு ஃபயர்ஃபாக்ஸ் இணையதளத்தை நீங்கள் அணுகலாம்.

அதே நேரத்தில் சைக்கிள் மற்றும் ரைடருக்கு ஃபயர்ஃபாக்ஸ் நிறுவனம் நிறைய ஆக்ஸஸரீகளையும் விற்பனை செய்கிறது. அவை கிட்களாக கிடைக்கின்றன. இவற்றின் விலை 3,650 ரூபாய் மற்றும் 10,110 ரூபாய் ஆகும். இந்த ஆக்ஸஸரீகள் தனியாகவும் கூட கிடைக்கின்றன. உதாரணத்திற்கு பெல்லின் விலை 120 ரூபாயில் இருந்தும், லைட்களின் விலை 1,050 ரூபாயில் இருந்தும், லாக்குகளின் விலை 300 ரூபாயில் இருந்தும் தொடங்குகின்றன. இதுதவிர கார் கேரியர்கள், லக்கேஜ் பேக்குகள், சைக்கிள் கவர்கள், வாட்டர் பாட்டில்கள் போன்ற பல்வேறு ஆக்ஸஸரீகளும் கிடைக்கின்றன.

டிரைவ்ஸ்பார்க் என்ன நினைக்கிறது?

20 ஆயிரம் ரூபாய்க்குள் கிடைக்கும் மவுன்டெயின் பைக்குகளின் செக்மெண்ட் வலுவானது. பல்வேறு நிறுவனங்களை சேர்ந்த ஏராளமான சைக்கிள்கள் இந்த செக்மெண்ட்டில் போட்டியிட்டு வருகின்றன. டிசைன் என்ற விஷயத்தை கணக்கில் கொண்டால், போட்டியாளர்களை காட்டிலும் ஃபயர்ஃபாக்ஸ் பேட் ஆட்டிடியூட் X சிறப்பாக உள்ளது. அத்துடன் இது Fun-to-ride சைக்கிளாகவும் உள்ளது. எனவே நீங்கள் இந்த சைக்கிளில் பணத்தை முதலீடு செய்யலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here