ஆவாரம் பூவும் அதன் பயன்களும்.

0
65

சரும அழகு

ஆவாரம் பூவை சமைத்துக்கூட சாப்பிடலாம் என்பது பலருக்கும் தெரியாமல் இருக்கலாம். சற்று துவற்ப்பு தன்மை கொண்ட இந்த ஆவாரம் பூவை சிறிதளவு எடுத்து அதை நன்றாக சுத்தம் செய்து. கீரை சமைப்பதுபோன்ற மறையில் சின்ன வெங்காயம் சேர்த்து சமைத்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் பொலிவு பெரும். முகம் அழகாக தோற்றுவிக்கும். இதை நமது முன்னோர்கள் தங்கள் உணவு முறை பழக்க வழக்கத்தில் கடை பிடித்து வந்தார்கள் என்பது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. இன்றைய காலகட்டத்தில் பலரும் அழகாக இருக்க வேண்டும் என்பதற்காக பல ஆயிரம் அல்ல லட்சம் ரூபாய் வரை கூட அழகு நிலையங்களில் கொண்டு கொட்டி தீர்த்து நோய்களைதான் திரும்ப வாங்கி வருகிறார்கள். அதற்கு மாற்றாக இதுபோன்ற உணவு பழக்க வழக்கத்தை மாற்றிக்கொண்டாலே போதும்.

சிறுநீரக செயல்பாடு

உணவு பழக்க வழக்கம், சரியான தூக்கம் இன்மை, மதுபோதை, புகை பிடித்தல் போன்ற பல்வேறு காரணங்களால் பலருக்கும் சிறுநீரக செயல்பாட்டில் பிரச்சனைகள் ஏற்படுவது அதிகரித்து வருகிறது. இதற்காக மருத்துவமனைகளில் பல லட்சம் ரூபாய் பணத்தை கொட்டி மருத்துவமும் பார்ப்பது உண்டு. அதை குணப்படுத்த ஏராளமான மருந்து மாத்திரகளை உட்கொண்டு மேலும் பக்க விளைவுகளுக்கு ஆளாகும் சூழலும் நிலவி வருகிறது. இதுபோன்ற நிலைக்கு தள்ளப்படாமல் இயற்கை தரும் கொடையாக உள்ள ஆவாரம் பூ கசாயத்தை தொடர்ந்து 30 நாட்கள் குடித்து வந்தால் சிறுநீரக செயல்பாடு முற்றிலுமாக சீரடையும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். அதாவது ஆவாரம் பூ 100 கிராம் எடுத்து 150 மில்லி தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி அதில் பசும்பால் சேர்த்து குடித்து வந்தால் சிறுநீரக பிரச்சனை குணமடையும்.

ரத்த சுத்திகரிப்பு

ஆவாரம் பூ மற்றும் அதன் இலையை சமமான அளவு எடுத்து நிழலில் உலர வைத்து போடியாக்கி கண்ணாடி குவளையில் போட்டு எடுத்து வைத்து கொள்ளலாம். அதில் இருந்து காலையும் மாலையும் என இரண்டு நேரமும் 2 ஸ்பூன் போடியை எடுத்து சுடு தண்ணீரிலோ அல்லது பாலிலோ கலந்து குடித்து வந்தால் ரத்தம் முற்றிலுமாக சுத்தம் அடையும். நரம்பு தளர்ச்சி, பெண்களுக்கான வெள்ளை படுதல் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு தீர்வாக அமையும்.

உடல் சூடு

500 கிராம் ஆவரம் பூவை எடுத்து 3 லிட்டர் தண்ணீரில் 12 மணி நேரத்திற்கு ஊரவைத்து அதன் பிறகு அந்த தண்ணீரை அடுப்பில் வைத்து நன்றாக காய்ச்சி கசாயம் வடிவில் எடுத்து பாதுகாத்து வைக்க வேண்டும். அதை நாள்தோறும் காலை மாலை பசும்பாலில் 100 மில்லி கலந்து குடித்து வந்தால் உடல் சூடு தனிந்து குளிர்சியடையும்.

அதேபோல, இன்சுலின் சுரப்பு, நீரிழிவு நோய், மூலம், வியர்வை நாற்றம், நீர்க்கடுப்பு, உடல் அரிப்பு உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு இந்த ஆவாரம் பூ மிகச்சிறந்த மருந்தாக அமைந்துள்ளது.

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ள SMACTA NEWS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here