நடிகர் விஜய்
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் விஜய். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் பீஸ்ட்.
இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை. ஆனால், இப்படத்தை குடும்பங்கள் கொண்டாடி வருகிறார்கள்.
விஜய் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த படங்களில் ஒன்று தெறி. அட்லீ இப்படத்தை இயக்கியிருந்தார்.
தெலுங்கில் ரீமேக்
இந்நிலையில், இப்படத்தை தற்போது தெலுங்கில் ரீமேக் செய்யப்போவதாக சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், தெறி தெலுங்கு ரீமேக்கில் டோலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர் பவன் கல்யாண் ஹீரோவாக நடிக்கப்போவதாக தெரிவிக்கின்றனர்.
விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.