கதை சொல்ல வந்தவருக்கு பைக்!…சர்ப்ரைஸ் பண்ண அஜித்

0
229

அஜித்தின் சினிமா வாழ்க்கையில் அவரின் இமேஜை உச்சத்திற்கு கொண்டுசென்ற படங்களில் முக்கியமாக கருதப்படும் படம் சிட்டிசன். அறிமுக இயக்க்குனராக சரவண சுப்பையா முதன் முதலில் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

இந்த் படம் பண்ணும் சமயத்தில் ஏற்கெனவே அஜித் ஆக்‌ஷன் படங்களில் கமிட் ஆகியிருந்தார். அமர்க்களம், தீனா போன்ற படங்கள் வரிசையாக ரிலீஸ்க்காக காத்துக் கொண்டிருந்தது.

இந்த படத்திற்காக இயக்குனர் சரவணா சுப்பையா அவரது பழைய பைக்கில் அஜித் வீட்டிற்கு சென்றிருக்கிறார். அப்போது அஜித் வரவேற்று கதையைக் கேட்டு அவருக்கும் பிடித்து விட்டதாம். அதன்பின் அஜித் அவரிடம் ஏன் எப்பா பார்த்தாலும் இந்த ப்ளூ சட்டையையே போட்டுக்கிட்டு வர்றீங்கனு கேட்டாராம்.

அதற்கு இயக்குனர் எனக்கு பிடிச்சது ப்ளு கலர் அதனால் தான் ப்ள் கலர் சட்டையை போட்டு வந்தேன் என்ற் கூறினாராம். உடனே அஜித் சரி இருங்கள் மதிய உணவு சாப்பிட்டு போகலாம் நானும் வந்து சாப்பிடுறேனு சொல்லி வெளியே போய்விட்டு ஒரு மணி நேரம் கழித்து வந்தாராம். இயக்குனரிடம் ஒரு பைக் சாவியையும் ப்ளு கலர் ஹெல்மெட் மற்றும் பேஜரையும் கொடுத்து என் இயக்குனர் இனி அந்த பைக்ல வரக்கூடாதுனு தான் வாங்கி வந்த புது பைக்கை அவரிடம் கொடுத்துள்ளார். இயக்குனருக்க்கு ஒரே இன்பதிர்ச்சியாக இருந்ததாக கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here