சென்னை : தியேட்டரில் போய் படம் பார்ப்பதை விட ஓடிடி.,யில் படம் பார்க்க விரும்புபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. விருப்பப்பட்ட நேரத்தில், விருப்பமான படத்தை தாங்கள் விரும்பியது போல் பார்க்கும் வசதி இருப்பதால் பலரின் ஃபர்ஸ்ட் சாய்ஸ் ஓடிடி.,யாக தான் உள்ளது.
முன்பெல்லாம் தியேட்டரில் ஒரு படத்தை பார்க்க முடியாமல் போனால் அடுத்து அந்த படத்தை எப்போ, எப்படி பார்ப்பது என்று யோசிக்க வேண்டி இருக்கும். ஆனால் இப்போது அப்படியில்லை. எப்படியும் தியேட்டரில் ஒரு படம் ரிலீசானால் அடுத்த மூன்று வாரங்களில் ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்யப்பட்டு விடும் என்பதால், ஓடிடி தளங்களுக்கு இருக்கும் மவுசு கூடி வருகிறது.
எந்த படம் எதில் ரிலீஸ் : அதிலும் சமீப காலமாக பல தரமான நல்ல படங்கள் நேரடியாக ஓடிடி.,யில் ரிலீஸ் செய்யப்படுவதால், தியேட்டரில் ரிலீஸ் செய்யப்படும் படங்களை விட ஓடிடி ரிலீஸ் படங்கள் ரசிகர்களை அதிகம் கவர்ந்துள்ளது. இந்த வாரம் எந்த ஓடிடி தளத்தில், என்ன படம் ரிலீஸ் ஆக உள்ளது என்ற முழு விபரத்தை இங்கே பார்க்கலாம்.
ஏப்ரல் 22 இத்தனை படங்களா :
மன்மத லீலை – ஆஹா தமிழ்
அந்தாக்சரி – சோனி லைவ்
ஆனந்தம் – ஜீ 5
கில்டி மைன்ட்ஸ் – அமேசான் பிரைம் வீடியோ
இந்த படங்கள் இரவு 7 மணி முதல் ஓடிடி தளங்களில் ரிலீசாக உள்ளன. குதிரைவால் படம் நள்ளிரவு 12 மணிக்கு நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியிடப்பட உள்ளது. பொதுவாக தமிழ் படங்கள் அனைத்துமே நள்ளிரவு 12 மணிக்கு தான் ரிலீஸ் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
12 நாட்கள் ஓடிடி திருவிழா தென்னிந்திய மொழி படங்கள் மட்டுமின்றி இந்திய அளவில் பல முக்கிய படங்கள் ஓடிடி.,யில் அடுத்த 12 நாட்களில் ரிலீசாக உள்ளது. இந்தி, பஞ்சாபி உள்ளிட்ட மொழி படங்களும் இந்த லிஸ்டில் உள்ளன. சில புதிய படங்களும் இந்த லிஸ்டில் இணைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.