மும்பை: பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டு போட்டுள்ள பதிவு பரபரப்பை கிளப்பி உள்ளது.
விமல் எலாய்ச்சி விளம்பரத்தில் ஷாருக்கான், அஜய் தேவ்கன் உடன் சமீபத்தில் அக்ஷய் குமாரும் இணைந்து நடித்திருந்தார்.
இந்நிலையில், பான் மசாலா விளம்பரத்தில் அக்ஷய் குமார் நடித்ததற்கு எதிராக கடந்த சில நாட்களாக ரசிகர்கள் அதிருப்தி தெரிவித்து ஏகப்பட்ட ட்ரோல்களை போட்டு வந்தனர்.
விளம்பரத்தால் வந்த வினை
ஷாருக்கான், அஜய் தேவ்கன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் Vimal Elaichi விளம்பரத்தில் நடித்து வந்த நிலையில், அதன் புதிய விளம்பரத்தில் நடிகர் அக்ஷய் குமார் இணைந்து நடித்திருந்தார். புகையிலை பொருட்களுக்கு ஆதரவு கொடுத்து நடித்துள்ளார் அக்ஷய் குமார் என ஏகப்பட்ட ட்ரோல் மீம்கள் குவிந்தன.
பகிரங்க மன்னிப்பு
இந்நிலையில், நடிகர் அக்ஷய் குமார் தற்போது தனது சமூக வலைதள பக்கங்களில் பகிரங்கமாக ரசிகர்களிடம் இதற்காக மன்னிப்பு கேட்டு போட்டுள்ள போஸ்ட் டிரெண்டாகி வருகிறது. அதில், ஆரம்பத்திலேயே ‘I am Sorry” என தொடங்கி தனது விளக்கத்தை அக்ஷய் குமார் அளித்துள்ளார்.
இனிமே நடிக்க மாட்டேன்
கடந்த சில நாட்களாக ரசிகர்களின் எதிர்ப்பு அலை எனக்கு நல்லாவே புரிகிறது. ஒருபோதும் நான் புகையிலை பொருட்களை ஆதரித்து நடித்தது இல்லை. இனிமேலும், நடிக்க மாட்டேன். சமீபத்தில் வெளியான விமல் எலாய்ச்சி விளம்பரத்தில் நடித்ததற்கும் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். இனிமேல், அது போன்ற விளம்பரத்திலும் நான் நடிக்க மாட்டேன் என உறுதியளிக்கிறேன் எனக் கூறியுள்ளார்.
ரசிகர்களுக்கு கோரிக்கை
ஆனால், அந்த விளம்பரத்தை நிறுவனம் உடனடியாக நிறுத்துவார்களா என்பது தெரியவில்லை. ஏனென்றால் உடன்படிக்கை அந்த மாதிரி உள்ளது. ஆனால், இனிமேல் அதுபோன்ற விளம்பரங்களில் நடிக்க மாட்டேன். என்றுமே எனக்கு உங்கள் ஆதரவும் அன்பும் வேண்டும் என நடிகர் அக்ஷய் குமார் ரசிகர்கள் மத்தியில் இப்படியொரு கோரிக்கை வைத்துள்ளார்.
ரசிகர்கள் ஆதரவு
நடிகர் அக்ஷய் குமார் மன்னிப்பு கோரிய நிலையில், அவரது ரசிகர்கள் அக்ஷய் குமாருக்கு பெரிய அளவிலான ஆதரவை கொடுத்து வருகின்றனர். சமீபத்தில் தனுஷ் உடன் இணைந்து அட்ரங்கி ரே படத்தில் நடித்திருந்த அக்ஷய் குமார் அடுத்ததாக பச்சன் பாண்டே (ஜிகர்தண்டா ரீமேக்) படத்தை ரிலீஸ் செய்திருந்தார். விரைவில், பிருத்விராஜ், ரக்ஷா பந்தன், ராம் சேது, மிஷன் சிண்ட்ரெல்லா, ஓ மை காட் 2 மற்றும் செல்ஃபி என ஏகப்பட்ட படங்கள் அவரது லைன் அப்பில் உள்ளது.