இந்தியாவில் 12 முதல் 17 வயதுக்குள்ளான சிறுவர்களுக்கு, ‘கோவோவாக்ஸ்’ கொரோனா தடுப்பூசி வழங்கச் சென்ற வாரம் நோய்த்தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு ஒப்புதல் வழங்கியது.
செவ்வாய்க்கிழமை வரை ‘கோவோவாக்ஸ்’ கொரோனா தடுப்பூசி ரூ.900 + ஜிஎஸ்டி என விற்பனை செய்யப்பட்டு வந்தது. அதனை இப்போது ரூ.225 + ஜிஎஸ்டி என விலை குறைத்து சீரம் நிறுவனம் அறிவித்துள்ளது.
தனியார் மருத்துவமனை : தனியார் மருத்துவமனைகளிலும் 225 ரூபாய் + ஜிஎஸ்டி உடன் கூடுதலாக 150 ரூபாய் சேவை கட்டணத்தைச் செலுத்தி கோவோவாக்ஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். கோவின் இணையதளத்திலும் இந்த விலை மாற்றம் குறித்துப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இரண்டாவது டோஸ் : முதல் டோஸ் கோவோவாக்ஸ் தடுப்பூசி போட்ட பிறகு 21 நாட்கள் இடைவேளையில் 2வது டோஸ் தடுப்பூசியைப் போடவேண்டும்.
கோவோவாக்ஸ் உலகளாவிய சோதனைகளில் கோவோவாக்ஸ் 90 சதவீதத்துக்கும் அதிகமான செயல்திறனை நிரூபித்துள்ளது என்றும், தடுப்பூசிக்கு இந்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு மூலம் பெரியவர்கள் மற்றும் 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு அவசரக்கால பயன்பாட்டுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.