மோர் ஒரு புரோபயாடிக் பானமாகும், இது குடலில் உள்ள ஆரோக்கியமான பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தூண்டுகிறது, இதனால் கோடை காலத்தில் பலரையும் பாதிக்கப்படக்கூடிய வயிற்று தொற்றுகள் முற்றிலுமாக தவிர்க்கப்படலாம்.
மோர் : இது ஒரு புரோபயாடிக் பானமாகும், இது குடலில் உள்ள ஆரோக்கியமான பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தூண்டுகிறது, இதனால் கோடை காலத்தில் பலரையும் பாதிக்கப்படக்கூடிய வயிற்று தொற்றுகள் முற்றிலுமாக தவிர்க்கப்படலாம். ஒரு கிளாஸ் (200 மில்லி) மோரில் சுமார் 30 கலோரிகள் உள்ளன. குறிப்பாக ஒரு மண் பானையில் சேமிக்கப்படும் மோர், ஒரு தனித்துவமான சுவையை கொடுக்கும்.
இளநீர் : எலக்ட்ரோலைட்டுகளால் நிரம்பிய மற்றும் மிக குறைந்த நேச்சுரல் சுகர் கொண்ட ஒரு பானம் – இளநீர். ஒரு கிளாஸ் தேங்காய் தண்ணீரில் 30 கலோரிகள் உள்ளது. இது சிறுநீரக கற்களைத் தடுக்கவும் உதவும்.
சோல் காடி (Sol Kadi): இது கோவா, கர்நாடகா மற்றும் கேரளாவின் கடலோரப் பகுதியில் வளர்க்கப்படும் கோகம் பழத்தின் சாற்றில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு பானம் ஆகும். கோகம் பழ சாற்றில் தேங்காய் பால், பச்சை மிளகாய், இஞ்சி மற்றும் உப்பு கலந்து, சிறிது கொத்தமல்லியும் தூவி விட சோல் காடி, ரெடி! ஒரு காரமான உணவை உட்கொண்ட பிறகு வயிற்றை குளிர்விக்க, செரிமானத்தை அதிகரிக்க உதவும் இந்த பானம், பசியை அடக்கவும், கொழுப்புக்களை குறைக்கவும் உதவுகிறது.
ஜல்ஜீரா (Jaljeera) : அதாவது – சீரக தண்ணீர். சீரகத்துடன் இஞ்சி, கருப்பு மிளகு, புதினா மற்றும் ட்ரை மேங்கோ பவுடர் ஆகியவற்றின் கலவையே ஜல்ஜீரா. சீரகம் நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் உணவு கனிமங்களை நல்ல அளவில் வழங்கும் ஒரு மருத்துவப் பொருளாகும். இது குமட்டல், உணவுக்குப் பிறகான ப்ளோட்டிங் மற்றும் அஜீரணத்திலிருந்து நிவாரணம் அளிக்கும். இதில் சேர்க்கப்படும் புதினா இலைகள் வெயிலை சமாளிக்க உதவும் குளிர்ச்சியை வழங்கும்.
குளிர்ந்த ரசம் (Chilled Rasam) : வெயில் காலத்தில் ரசத்தை சூடாக குடிப்பதில் உங்களுக்கு சிரமம் இருப்பின், ஒரு பாட்டிலில் அடைத்து குளிர்ச்சியாக்கியும் குடிக்கலாம். ரசத்தில் உள்ள தக்காளி, பூண்டு, மிளகு, மஞ்சள் தூள், கறிவேப்பிலை மற்றும் புளி போன்ற பொருட்கள், இருமல் மற்றும் சளி, செரிமான சிக்கல் மற்றும் ப்ளோட்டிங் போன்ற சிக்கல்களுக்கு மகத்தான ஒரு தீர்வு ஆகும்.
பேல் ஷர்பத் (Bael Sharbat) : வயிற்றுப்போக்கை தூண்டும் பாக்டீரியாக்களுக்கு எதிராகப் போராட உதவும் இந்த பானம் ஒரு சிறந்த கோடைகால பானமும் கூட! இது இனிக்காது என்பதால் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் உதவும். இதில் வைட்டமின் சி நிறைந்துள்ளதால், இது நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும். இது கொலஸ்ட்ராலையும் குறைக்கும்.
ராகி அம்பிலி (Ragi Ambli) : அதாவது ராகி கஞ்சியில் தயிர் சேர்க்க – ராகி அம்பிலி ரெடி! கால்சியம், இரும்பு மற்றும் நார்ச்சத்து போன்ற ஊட்டச்சத்துக்கள் நிரம்பிய இந்த பானம் மனச்சோர்வு, தூக்கமின்மை, பதட்டம் மற்றும் ஒற்றைத் தலைவலி போன்றவைகளில் இருந்து நிவாரணம் அளிக்கும்.