SJ சூர்யா ராதாமோகன் இயக்கத்தில் பொம்மை என்கிற படத்தில் நடித்துவருகிறார். இந்த படத்தில், ப்ரியா பவானி ஷங்கர் கதாநாயகியாக நடிக்கின்றார். மான்ஸ்டர் பட வெற்றிக்குப் பிறகு எஸ் ஜே சூர்யா, பிரியா பவானி சங்கர் காம்பினேஷன் இணைந்துள்ளது. முதல் முறையாக இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜாவுடன் ராதாமோகன் இப்படத்தில் கை கோர்க்கிறார். பொம்மை படத்தின் படப்பிடிப்பு 2020 ஆம் ஆண்டே நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் கொரோனா உள்ளிட்ட காரணங்களால் பட ரிலீஸ் தள்ளிப் போய்க் கொண்டுள்ளது.
நீண்ட நாட்களாக படத்தை பற்றி எந்த தகவலும் வெளியாகாமல் இருந்த நிலையில் தற்போது படத்தைப் பற்றிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த படத்தின் இசை உரிமையை பிரபல இசை வெளியீட்டு நிறுவனமான ‘திங்க் மியுசிக்’ கைப்பற்றியுள்ளது. இதை தற்போது அதிகாரப்பூர்வமாக ஒரு புதிய போஸ்டரோடு அறிவித்துள்ளது. பொம்மை படத்துக்காக இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவின் பின்னணி இசை அபாரமாக வந்துள்ளதாக சில மாதங்களுக்கு முன்னர் எஸ் ஜே சூர்யா அறிவித்திருந்தது ரசிகர்களின் கவனத்தைப் பெற்றது.